Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

ரெனால்ட் கார் மாடல்களுக்கு சலுகைகள் அறிவிப்பு…. இதுதான் கார் வாங்க சரியான நேரம்…..!!!!

ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி க்விட், டிரைபர், டஸ்டர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சலுகை கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
அதன்பாடாய் ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும். ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. டிரைபர் மாடலின் 2021MY வேரியண்டை வாங்குவோர் ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் பெற முடியும்.
ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் 5 ஆண்டுகள் | 1 லட்சம் கிலோமீட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் சிறப்பு நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ரெனால்ட் டஸ்டர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.

Categories

Tech |