Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இனி கட்டட கழிவுகளை கொட்டினால் அபராதம்…. கடும் எச்சரிக்கை…..!!!!

சென்னையில் பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தும் அதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் தலா நான் ஒரு மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாடு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாடுகள் இவைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இதனை மீறி செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒரு டன் அளவிற்கு குறைவாக கட்டட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது 2000 , ஒரு டன் அளவிற்கு அதிகமாக கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |