நாடு முழுவதும் இதுவரை 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கொரோனா வகையின் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 86 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில், 34 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்படும் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்கும் பணியில் நாட்டில் 28 ஆய்வகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.