எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்ஷன் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 40, அதிகபட்ச வயது 80. இதில் இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்..
இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் பக்கத்தில் உள்ள எல்ஐசி ஏஜென்ட் தொடர்பு கொண்டோ அல்லது www.licindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைனிலேயோ முதலீடு செய்து கொள்ளலாம். இதில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் செலுத்தினால் போதும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அரையாண்டுக்கு 6000 ரூபாயாகவும், காலாண்டுக்கு 3000 ரூபாயாகவும், மாதத்துக்கு 1000 ரூபாயாகவும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் 12,000 ரூபாய் வரை பென்சன் பெற முடியும்.