நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வகையில் லடாக்கில் உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி லடாக் செல்லும் இந்தியர்கள் கட்டாயம் முறையான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் Inner Line Permit பெற வேண்டும். ஐபிஎல் அனுமதி அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது. எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம், செல்லக்கூடாது என்று நிர்வாகம் அறிவுறுத்தும் என்று தெரிவித்துள்ளது.