காணாமல் போன 23 வயதுடைய ஒரு இளம்பெண் சாலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய நாட்டில் Megan Newborough’s என்ற 23 வயதுடைய இளம்பெண் வாழ்ந்து வந்துள்ளார். அந்த இளம்பெண் சென்ற சனிக்கிழமை காணாமல் போனதாக Warwickshire என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள Woodhouse Eavesக்கு அருகில் இருக்கும் Charley சாலையில் ஒரு இளம்பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் காணாமல் போன Megan Newborough’s என்ற 23 வயதுடைய இளம்பெண்ணின் உடல் தான் என்பதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின் போலீசார் இளம்பெண்ணின் இறப்பு குறித்து நடத்திய விசாரணையில் Ross Macullam என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர் Leicester Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போவதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். மேலும் இறந்து கிடந்த அந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இறந்த பெண்ணின் பெற்றோர் கூறுகையில் “இந்த கொலை சம்பவம் குறித்த தகவல்கள் தெரிந்தலோ அல்லது கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் இருந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து பல செய்திகள் விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.