பிரான்சின் கடல்கடந்த தீவில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவியதால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டின் மேற்கிந்திய தீவான Martinque கொரோனா குறித்த கட்டுப்பாடு ஒன்றை தங்கள் தீவுக்குள் கொண்டுவந்துள்ளது.
அதாவது எதிர்வரும் 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அத்தீவின் அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் அத்தீவிலுள்ள அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கையையும் விடுத்துள்ளார்கள்.