ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் வைத்து பராமரிக்காமல் இருக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்கள் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் அந்த கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியானது.
இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் அது எந்த வங்கி சார்ந்த ஏடிஎம் என அறிந்து அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.