Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் அதிர்ச்சி… “துனிசியாவில் கடல் அலையில் சிக்கிய படகு… 13 பெண்கள் பரிதாப பலி.!!

துனிசியா நாட்டில் படகு ஓன்று  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 13 பெண்கள்  உயிரிழந்தனர். 

துனிசியா நாட்டிலிருந்து 50 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு படகு மத்திய தரைக்கடல் வழியாக புறப்பட்டு சென்றது. இந்த படகு அங்குள்ள லாம்பெதூசா (Lampedusa) தீவின் அருகே வந்த போது மோசமான வானிலையின் காரணமாக திடீரென ஏற்பட்ட  கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Image result for Thirteen people were killed when a boat capsized in Tunisia.

இதையடுத்து நள்ளிரவில் கிடைத்த தகவலின் படி இரண்டு  மீட்பு கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு  சென்ற  இத்தாலி கடற்படையினர், அங்கு நீரில் உயிருக்கு போராடி  தத்தளித்துக் கொண்டிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Image result for Thirteen people were killed when a boat capsized in Tunisia.

மேலும் 13 பெண்கள் பலியான நிலையில்  சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Categories

Tech |