Categories
சென்னை மாவட்ட செய்திகள்

60 வயது திமுக நிர்வாகி….”சிறுமியிடம் அத்துமீறல்”… வெளுத்து வாங்கிய பொதுமக்கள் ….!!

வியாசர்பாடியில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் உள்ள வியாசர்பாடியின் அன்னை சத்தியா நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 60 வயதான இவர் அந்த பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரிம் கடை நடத்தி தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார். மேலும் அந்தப்பகுதி திமுகவில் முக்கிய நிர்வாகியாகவும்  இருந்து வருகிறார்.இவரது கடைக்கு அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகின்றது.

அப்பொழுது கடையில் இருந்த பாண்டியன் தனியாக வந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கத்தி  , அலறி கூச்சலிட்டதால் சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் , பொதுமக்கள் ஓடி வந்து  சிறுமியை மீட்டு பாண்டியனை சராமாரியாக தாக்கினர்.  பின்னர் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் கடையையும் அடித்து நொறுக்கினர்.இதையறிந்த எம்கேபி நகர் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியனை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |