முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் டுவிட்டரில் வேலூர் சரவணன் என்பவர், ‘வேலுமணி போன்றவர்களை அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது’என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதாக பதிவிட்டிருந்தார். இதை பார்த்து பதறி அடித்த அமைச்சர், ‘இது போலி செய்தி. நான் அப்படி கூறவே இல்லை’ என்று அவர் பதிலளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும்.
என்னை ஒன்றும் செய்ய முடியாது.-முன்னாள் அமைச்சர் @mafoikprajan#ஊழல்மணி_வேலுமணி
— வேலூர் சரவணன்🖤❤️ (@SaraVellore) August 10, 2021