Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

பாரம்பரியம் காக்க…. பூம் பூம் மாட்டிடம் ஆசி…. வைரலாகும் அமைச்சர் வீடியோ…!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீடு இருக்கும் வீதியில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதை கண்ட அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

Image result for jayakumar

பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி டும் டும் மேளம் தட்டி செய்தி சொன்னாண்டி என்பது அந்த கால இளைஞர்களின் பிரபல பாடலாக இருந்தது.  பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், மாடு தலையை அசைத்த விதமும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சி ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். நமது பண்பாட்டு கூறுகளை பாரம்பரிய அம்சங்களை கேலியாகப் பார்க்கும் மனோபாவம் தமிழகத்தில் நிறைய பேரிடம் உள்ளதாக குறிப்பிட்ட அவர் பூம்பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |