Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகளில் கல்வி தரம் மேம்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் பிகே சேகர்பாபு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்: தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமாக உள்ள 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்லூரியின் தரம் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் இந்தப் பள்ளி கல்லூரிகளில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், பணி நியமனம் மற்றும் ஊதிய முரண்பாடின்றி ஒரே மாதிரியாக வழங்கப்படும். மூப்பு, தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |