கர்ப்பிணிப் பெண் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஆவார். இந்நிலையில் மோனிஷா கடந்த 7ஆம் தேதி இறந்துள்ளார்.
மேலும் உறவினர்கள் மோனிஷாவை அடக்கம் செய்துள்ளனர்.இதுகுறித்து கலிராயன் கிராம அலுவலரான சதீஷ்குமார் இளம்பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.