Categories
மாநில செய்திகள்

அரசு விழா… விடுமுறை…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

வரும் ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் ஏறத்தாள 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த கோவில்களில் ஒன்று. அண்மையில் ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக இதனை அறிவித்தது. பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலை கண்டு செல்கின்றனர்.

இந்த ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதியில் உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாவட்ட அளவில் கொண்டாடப்படுகின்ற இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தன. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று அறிவித்தார். ராஜேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |