Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் உலா வரும்…. தமிழக முன்னாள் அமைச்சரின் மகன்…. வெளிவந்த புகைப்படங்கள்….!!

ஆஸ்திரேலியாவில் தமிழக முன்னாள் அமைச்சரின் மகன் சொகுசாக தனது வாழ்வை கழித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான சூயஸ் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவர்கள் கோவையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்தபொழுது அவர்களுடன் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றது தான் அவரின் முதல் வெளிநாட்டு பயணம். இதனால் அமைச்சருக்கும் அந்நிறுவனத்திற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அவரின் மகனான விகாஸ் வேலுமணியை அதிகம் பாதிப்பு இல்லாத இடமான ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொறியியல் பட்டதாரியான விகாஸ் வேலுமணி சூயஸ் நிறுவனத்தின் ஆதரவில் ஆஸ்திரேலியாவில் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அங்கு அவருக்கென தனியாக குட்டி விமானம் ஒன்று வெளியே செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹெலிகாப்டர், ஜீப், பீச் போன்றவற்றில் வைத்து போட்டோஷூட் நடத்தி தனது வாழ்வை மிகவும் உல்லாசமாக கழித்து வருகிறார். மேலும் தனது தந்தையின் வியாபார நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |