Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை… தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்….? வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது பல மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கூட்டம் கூடுவதாலேயே சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மக்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பல இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதில்லை. அனைத்து மத ஆலயங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. கொரோனாவை பொதுமக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் அறிவுறுத்தலை மீறி கூட்டம் கூடினால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |