உலகிலேயே மிகவும் சிறிய குழந்தை என்று கருதப்படும் குறைமாதக் குழந்தையை ஓராண்டு கழித்து தற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
சிங்கப்பூரில், கடந்த வருடம் ஜூன் மாதம் Kwek Yu Xuan என்ற பெண் குழந்தை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. இக்குழந்தையை தாயின் கருவறையிலிருந்து 6 மாதத்திலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே 212 கிராம் எடை தான் இருந்துள்ளது.
அதாவது, ஒரு ஆப்பிள் பழத்திற்கான எடை தான் இந்த குழந்தை இருந்திருக்கிறது. எனவே மருத்துவர்கள் இக்குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்று நினைத்துள்ளனர். எனினும், ஓராண்டிற்கும் மேலாக மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை, தற்போது நன்றாக உடல் எடை கூடி ஆரோக்கியமாக உள்ளது.
கடந்த, ஜூலை மாதம் 6.3 கிலோகிராம் எடைக்கு வந்தது. எனவே கடந்த வார கடைசியில் குழந்தையை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி, இக்குழந்தை தான் உலகிலேயே மிகக்குறைந்த எடையில் பிறந்து ஆரோக்கியமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.