Categories
மாநில செய்திகள்

BREAKING: சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகளை துவங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலவர் மு.க ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி துவங்குவதற்கு, அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக மாணவர்களை சுழற்சிமுறையில் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல் நாளில் 20 மாணவர்கள், மறுநாள் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வர வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |