Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டம்… சைபர் கிரைம் போலீஸ் முடிவு…!!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாயை நடிகர் ஆர்யா மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் இருந்து 71 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும், அதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதாக அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரணை செய்யாத காரணத்தினால் அந்த பெண்ணின் வழக்கறிஞர் சிபிசிஐடி விசாரிப்பதற்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மனுவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நேற்று நடிகர் ஆர்யா சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் நேரில் ஆஜரானார். இவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர்யாவை மீண்டும் விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |