ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் நாட்டின் முக்கிய மாகாண தலைநகரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அதன்படி தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் நான்காவது நகரமான மசார் இ ஷரிப் நகரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்தியர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள மசார் இ ஷரிப்-லிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.