லோடு ஆட்டோவை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனது சித்தப்பாவிற்கு சொந்தமான லோடு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகின்றார். இவர் ஆட்டோவை ஓட்டி விட்டு தனது சித்தப்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் சரத்குமார் சித்தப்பாவின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் வசிக்கும் செந்தமிழ்வாணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு செந்தமிழ்வாணன் சரத்குமாரின் லோடு ஆட்டோவை திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பிறகு காவல்துறையினர் செந்தமிழ் வாணனிடமிருந்து ஆட்டோவை மீட்டு சரத்குமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.