தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது . இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தயாராக இருக்கிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி பள்ளிகளை திறக்க தயாராக இருக்கிறோம். முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கும் பட்சத்தில் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் ஒரே நாளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதல் நாளில் 20 மாணவர்கள், அடுத்தநாள் மீதமுள்ள 20 மாணவர்கள் என சுழற்சி முறையில் மாணவர்களே வகுப்புகளில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.