இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் போர்மேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மல்லல் கிராமத்தில் அய்யாச்சாமி என்பவர் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அய்யாச்சாமி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து கீழபெருங்கரைநான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த தண்ணீர் லாரி கட்டுபாட்டை இழந்து அய்யாச்சாமி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பார்த்திபனூர் காவல்துறையினர் அய்யாச்சாமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அருப்புகோட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முத்துராமலிங்கம் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.