ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் தமிழக மக்களை ஏமாற்றலாம் என திமுக நம்புவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக தான் இருந்தது என்றும் , அப்போது மீட்காத கச்சத்தீவை ஆட்சியில் இல்லாதபோதா மீட்கப் போகின்றது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் ‘ஊழல்’ கற்றுக்கொடுத்ததே நீங்கதானே. லஞ்சம் நீங்கதான் வாங்குனீங்க. நீட் தேர்வை நீங்கதானே கொண்டு வந்து நீட்டுனது. கெயில் , எரிவாயு குழாய் பதிக்க சொன்னதே நீங்க தான் . மீத்தேன் , ஈத்தேன் அதை கொண்டு வந்ததே நீங்கதானே. ஸ்டெர்லைட்டை திறந்து வைத்த மகாராசா நீங்க தானே. அணு உலை திட்டம் உங்களுக்கு தெரியாமல் எப்படி வந்துருக்கும் என்று சரமாரியாக விளாசினார்.