சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
அமெரிக்காவில் சான் ஜோஸில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு வீட்டில் 8 வயது சிறுமி தனது தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு ஒரு வாலிபன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கி சென்று ஒரு அறையினுள் நுழைந்தான். இதனை அடுத்து அறையின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது தாத்தாவிடம் அழுதுகொண்டே கூறியுள்ளாள். இதனை தொடர்ந்து தாத்தா அவனை ஓடிப்போய் பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அங்கிருந்து அவன் தப்பித்து சென்றுவிட்டான். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும், சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்தும் குற்றவாளியை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவன் பெயர் Dupree Kenneth Hornsby என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவனை ஜாமீனில் வெளியே வர முடியாதபடி சிறையில் வைத்துள்ளனர். இதனை அடுத்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி Dupree நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளான். குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.