தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, பொருளாதாரம், நிர்வாகம் உள்ளிட்ட பல செயல்பாடுகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சி என்ற விருதை தஞ்சாவூர் மாநகராட்சி பெறுகின்றது.
இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விருதை ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளுக்கான முதல் பரிசை உதகையும், இரண்டாவது பரிசை திருச்செங்கோடும், மூன்றாவது பரிசை சின்னமனூரும் பெறுகின்றது. இதைத்தொடர்ந்து சிறந்த பேரூராட்சிகளாக கல்லக்குடி, மேல்மட்டம்பாக்கம், கோட்டையூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.