Categories
மாநில செய்திகள்

அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு திமுக ஆதரவு…. திருச்சி சிவா….!!!!!

இதர பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் பட்டியலை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 127வது அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா 2021 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயமரியாதை கட்சியாக விளங்கும் திமுக அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆதரிக்கிறது என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொடுத்த வழக்கால் OBC பிரிவுக்கு 27% இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது. OBC பிரிவினருக்கான அதிகபட்ச உச்ச வரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க பரிசீலிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் 678 ஓபிசி பிரிவினர் பாதிக்கும் சூழல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |