Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…. கடைகள் ஏலம்…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!

மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் பல்வேறு வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன.

இந்த ஏலத்தில் கடைகளுக்கு 2 லட்சம் மற்றும் உணவகங்களுக்கு 4 லட்சம் செலுத்திய வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான வியாபாரிகள் வணிகர் சங்க நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ளனர். இதில் மாநகராட்சி செயற்பொறியாளரான ஜெகதீசன், வருவாய் ஆய்வாளரான  பிரகாஷ் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

Categories

Tech |