தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சியை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் கோவிலின் நுழைவு வாயில்களில் உள்ள விநாயகர், நடராஜர், முருகர், சப்த கன்னிமார்கள் போன்ற பரிவார தெய்வங்களுக்கும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றுள்ளனர்.