Categories
தேசிய செய்திகள்

”எங்கு பார்த்தாலும் ஜெகன்மோகன்”ஆந்திராவிலும் ஸ்டிக்கர் கலாச்சாரம் …..!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் கூடிய ஸ்டிக்கர்களை, அம்மாநில போக்குவரத்து அலுவலர்கள் ஒட்டிவருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றார். இவர் அக்டோபர் 4_ஆம் தேதி வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்தார். இதன் மூலம் சொந்த ஆட்டோ வைத்துள்ளவர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இதனால் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி_க்கு நன்றி தெரிவித்த ஸ்டிக்கரை ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்கள் , ஆட்டோக்கள் என அம்மாநில சாலைப் போக்குவரத் துறை அலுவலர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வுக்காகவே ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றோம் என்று தெரிவித்தனர். அதே நேரம் அரசே நன்றி தெரிவித்து ஸ்டிக்கர் ஓட்டுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Categories

Tech |