பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் ஐந்தாவது சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்பார்கள் என்று பலபெயர்களில் பட்டியல் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்கும் 8 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, பாபா பாஸ்கர் , நடிகை சகிலாவின் மகள் லீலா, யூடியூப் பிரபலம் ஜிபிமுத்து, நடிகை ஐஸ்வர்யா, நடிகர் ஜான் விஜய் மற்றும் நடிகை சம்யுக்தாவின் தோழி ப்ரதாயினி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.