Categories
மாநில செய்திகள்

இவர்கள் அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு…. அலட்சியமாக இருக்காதீர்கள்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதையடுத்து மீண்டும் தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம். கொரோனாவை அலட்சியமாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். தேவையற்ற இடங்களில் கூட்டத்தை தவிர்க்கவும்” என்று எச்சரித்துள்ளார் .

Categories

Tech |