சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேனில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கக்கன் நகர் பகுதியில் வசிக்கும் முருகபாரதி என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த 73 மது பாட்டில்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.