தனுசு ராசி அன்பர்களே.! அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்.
இன்று ஆரோக்கியம் சீராக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையிலும் நீங்கள் தலையிடாமல் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கவலைப்படாமல் இருக்கலாம். அக்கம்பக்கத்தினர் வீட்டாருடன் பகை ஏற்படாமல் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேர்ந்துவிடும். மனதிற்குள் சந்தோஷம் கூடும். உறவுகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். எதையும் சாதித்துக் கொள்ளும் திறமை இருக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். எல்லாவிதமான கஷ்டமான சூழ்நிலையும் இப்பொழுது கட்டுக்குள் வரும். இன்றைய நாளை ரொம்ப அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இறை வழிபாட்டில் அதிக நம்பிக்கை கிடைக்கும். இன்று யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். பணம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்.
தைரியம் இருந்தால் மட்டும் தான் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள பாக்கிகள் வசூல் செய்யும்போது கவனம் வேண்டும். வார்த்தைகளை கொட்டிவிட வேண்டாம். வாடிக்கையாளரின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க முடியும். தன்னம்பிக்கை கூடும். நல்ல குணம் இருக்கும். காதலில் உள்ளவர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். காதல் கைகூடி ஆனந்தத்தைக் கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் எண்ணற்ற சந்தோஷத்தை தரும். மாணவர்களுக்கு தைரியமான நாள். மாணவர்கள் உற்சாகமாக எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட முடியும். விளையாட்டுத்துறையில் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்