Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! அவசரங்கள் வேண்டாம்….! மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இன்று கண்டிப்பாக எதையும் யோசித்து செய்ய வேண்டும். அவசரங்கள் வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் இருப்பதினால் காரியத்தில் கவனமாக ஈடுபடவேண்டும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கும். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். உங்களுடைய செயல்பாடுகளை மற்றவர்கள் குறை சொல்லக்கூடும். அதனைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். சந்திராஷ்டமம் முடிந்த பிறகு மனக்குழப்பம் தீர்ந்து எல்லாம் சரியாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் வேண்டும். சிலநேரங்களில் ஞாபகமறதி இருக்கும். எதையும் சரிபார்த்துக் கொண்டு பின்னர் செய்யவேண்டும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

குடும்பத்தில் யாரிடமும் கோபம் கொள்ள வேண்டாம். கோபம் காட்டாமல் நடந்துகொள்வது நல்லது. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும்போது கவனம் வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் சிரமத்தை கொடுக்கும். பொறுமையாக இருந்து தான் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களுக்கு குழப்பமான நாள். என்ன செய்யலாம், எது செய்யலாம், எப்படி செய்யலாம் என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். மாணவர்கள் விட்டு பிடிக்க வேண்டும். எல்லாம் சிறப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் சிவப்பு

Categories

Tech |