நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் பவானிசாகர் சாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாசன வசதிக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 100 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளனர்.