மது போதையில் இருந்த பெண் பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர். இந்நிலையில் இரவு நேரத்தில் மது போதையில் இருந்த கௌரி திடீரென பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.
இதனையறிந்த அவரது குடும்பத்தினர் கௌரியை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கௌரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தக்கோலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.