நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எனவே ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் லூதியானா, அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.