டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி 143 ரன்களை குவித்துள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியில் ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னிலும் ,சுரேஷ்குமார் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடினார்.
இவருடன் இணைந்த கேப்டன் ஷாருக்கானும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கோவை அணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்ஷன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணி சார்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கியுள்ள திண்டுக்கல் அணி 144 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.