Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிறப்பு முகாம்… 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்ப்பு… அடையாளஅட்டை வழங்கிய ஆட்சியர்…!!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, உதவித்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி திருநங்கைகள் மனு அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கியுள்ளார். இதனையடுத்து குமாரபாளையத்தில் சேர்ந்த திருநங்கைகள் வசிப்பதற்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், பாதியில் நிறுத்தப்பட்ட எங்களின் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சிறப்பு முகாமில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, தாசில்தார் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், சமூக நல அலுவலர் கீதா உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |