Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் வாழ்த்து இப்படியா சொல்லுவாங்க… கொஞ்சம் கூட அறிவே இல்லையா… ஹர்திக்கை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்..!!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜாகீர்கானுக்கு பிறந்தநாள் கூறிய விதம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. 

2000 -ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர். அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து, ஜாகீர்  இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து தனது வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார்.

Image result for Happy birthday Zak ... Hope you smash it out of the park like I did here

இவர்  2011- ல் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஒரு பகுதியாக இருந்தவர். அந்த போட்டியில், ஜாகீர் கான் சிறப்பாக பந்து வீசி  2 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 மெய்டன் ஓவர்களை வீசினார். இந்தியாவுக்காக அவர் கடைசியாக விளையாடிய போட்டி  2014 இல் வெலிங்டனில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். இவர்  2000 – 2014 ஆம் ஆண்டு வரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 311 டெஸ்ட் விக்கெட்டுகளும், 282 ஒருநாள் விக்கெட்டுகளும் மற்றும் டி 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லிலும் 102 விக்கெட்டுகள் செய்துள்ளார்.

Image result for Happy birthday Zak ... Hope you smash it out of the park like I did here

இந்த நிலையில் ஜாகீர் கான் தனது 41 வது பிறந்த நாளை நேற்று ( திங்கள்கிழமை ) நேற்று கொண்டாடினார். இவரது பிறந்த நாளுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆனால் அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறிய விதம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

Image result for Happy birthday Zak ... Hope you smash it out of the park like I did here

ஆத்திரத்தில் ஹர்திக்கை திட்டி தீர்த்தனர். சரி அப்படி என்னதான் கடுப்பேத்தும் அளவிற்கு பதிவிட்டார் என்றால், ஜாகீர்கான் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடிக்கும் வீடியோவை பதிவிட்டதுடன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாகீர் கான்…  இந்த ஷாட்டை போல பிறந்தநாளை அதிரடியாக கொண்டாடுங்கள் என்று தான் சிக்ஸர் அடித்ததை சுட்டிக்காட்டி பதிவிட்டார். இதனால் தான் ரசிகர்கள் பலர் டென்ஷனாகி விட்டனர். அதேபோல ஜாகீர் கான் பதிவிட்ட சிக்ஸர்களையும் பலர் பதிவிட்டனர். இருப்பினும் ஒரு ஜீனியர் பிளேயருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்படி கூறலாமா என்பதை கமெண்ட் செய்யவும்.

Categories

Tech |