நாமகிரிபேட்டையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 90 லட்சம் வரை மஞ்சள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இங்கு விற்பனைக்காக நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, ஆத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளைக் கொண்டுவந்துள்ளனர். அதன்படி விரலிமஞ்சள் 1,600 மூட்டைகளும், உருண்டை ரகம் மஞ்சள் 430 மூட்டைகளும், பனங்காலி ரக மஞ்சள் 70 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சேலம், நாமகிரிப்பேட்டை, ஈரோடு, ஒடுவன்குறிச்சி உட்பட பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு மஞ்சளை ஏலம் எடுத்துள்ளனர். இதனையடுத்து பனங்காலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 12,402 ரூபாய் முதல் அதிகபட்ச விலைக்கு 15,689 ரூபாய்க்கு விற்பனையானது. இதனைத்தொடர்ந்து விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 6,332 ரூபாய்க்கும் அதிக பட்ச விலையாக 8,749 ரூபாய்க்கும், உருண்டை ரக மஞ்சள் குறைந்தபட்ச விலையாக 6,112 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 7,012 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 90 லட்சம் வரை ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.