பிரித்தானியாவில் சாலையோரம் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தெற்கு ஸ்டாஃபோர்ட்ஷயர் நகரில் Bridgnorth சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரம் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை எரிக்கப்பட்ட பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதில் “இந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்த பின்னர் எரிக்கப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிட முடியும்.
மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயதுக்குள் இருக்கலாம் என்று தடயவியல் அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக மாயமான இளம் பெண் குறித்து அறிந்தவர்கள் அல்லது இந்த பெண்மணி தொடர்பில் இருந்தவர்கள் எவரேனும் போலீசாரை தொடர்பு தொடர்பு கொள்ளலாம்” என்று கேட்டுக் கொண்டுள்னர்.