தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் டோக்கன் வழங்கப்பட்டு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது( கோவாக்சின் மட்டும்) தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவோம்! தனிமனித பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.