Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ முழு விபரம்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி , எச். புதுப்பட்டி, காளிப்பேட்டை, ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெனசி, புதுப்பட்டி, அதிகாரபட்டி, இருளப்பட்டி, பட்டுகோணம்பட்டி , மஞ்சவாடி, கோம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்டம், நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் இன்று  மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், வி.சி.,நகர், கரட்டடிபாளையம், கச்சேரிமேடு, தமிழ்நகர், அழகுநகர், கள்ளிப்பட்டி, கிருஷ்ணா நகர், செல்லப்பா நகர், அக்ரஹாரக்கரை, காலேஜ்ரோடு பகுதிகளில், காலை, 7 முதல், 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபி துணை மின் நிலையத்தில் இன்று  நடக்கும் பராமரிப்பு பணியால், ஜீவா நகர், வெண்ணிலா நகர், நல்லம்மாள் நகர், அம்பிகை நகர், புதுக்காடு, பதி, நஞ்சகவுண்டம்பாளையம், பாரியூர் ரோடு பகுதிகளில் காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

அதேபோல ஈரோடு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. சிந்தன்நகர், கிருஷ்ணம்பாளையம், கமலாநகர், கக்கன்நகர், வி.ஜி.பி., நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர்., நகர், மாதவக்காடு, வண்டியூரான் கோவில் பகுதிகளில், மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  காலை 9 மணி முதல் 4 மணி வரை தேவனூர் புதூர் கரட்டூர் , ராவணபுரம் ஆண்டியூர் , பருத்தியூர் வல்லக்கொண்டபுரம், பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வளைய பாளையம், அர்த்தனாரி பாளையம் , அனுமந்த பட்டணம் , சாலையூர் கொடிங்கியம், தீபாலபட்டி, கரட்டுமடம், ஜிலேபி நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் நாளை (12-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நெல்லை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின் கம்பம் நடும் பணிகள் நடைபெற இருப்பதால் பாளையங்கோட்டை எம்கேபி நகர் மற்றும் சமாதானபுரம் காமராஜர் நகர் நீதி மன்றம் எதிர் புறம் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதேபோல நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் ராஜாக்க மங்கலம் , வாகைகுளம் , சிறுமளஞ்சி , பெருமளஞ்சி கீழுர் , பெரு மளஞ்சிமேலூர் , ஆச்சியூர் , ஏ. எம். ஆர். எல். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Categories

Tech |