Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடையில்…. என்னென்ன பொருள் ஸ்டாக் இருக்குனு…. இப்படி தெரிஞ்சிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் ஸ்டாக் இருக்கிறதா? என்பது தெரியாமலேயே ரேஷன் கடைக்கும் வீட்டிற்கும் அலைந்து களைப்பாகி விடுவார்கள். இப்படி அலையாமல் வீட்டில் இருந்துகொண்டே ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் எவ்வளவு ஸ்டாக் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை நாம் அறிய www.tnpds.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பொதுவிநியோகத் திட்ட அறிக்கைகள் என்ற ஆப்ஷனில் சென்றால் உங்கள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் பொருட்களை அறிந்து கொள்ளலாம். மற்றொறு முறை, TNPDS என்ற ரேஷன் கடைக்கான மொபைல் ஆப்பை  பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் உங்களுடைய ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் ஸ்டாக் இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நாம் ஒவ்வொரு மாதம் வாங்கிய பொருட்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |