Categories
உலக செய்திகள்

சம்பளம் கட்: ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ ஊழியர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘பிரபல’ நிறுவனம்….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா பரவல் காரணமாக பல கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருந்தாலும், பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் இதையே காரணமாக வைத்து, வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன.

இந்நிலையில், கூகுள் நிறுவனமும் வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு நிரந்தர முடிவு இல்லை என்றும், பரிசோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கூறிய கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், ‘இந்த சம்பளம் தொடர்பான ஏற்றம் இறக்கம் ஊழியர்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |