Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய PF கணக்கில்….ஆன்லைன் மூலம் KYC விவரங்களை…. அப்டேட் செய்வது எப்படி…???

ஆன்லைன் மூலமாக பிஎப் வாடிக்கையாளர்களின் கணக்கில் KYC அப்டேட் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

KYC எனப்படும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை பிஎஃப் பயனாளர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் எப்படி அறிந்து கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு சார்பாக பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது.

இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, பிஎஃப் பணத்தை அதிகளவில் எடுத்து வருகின்றனர். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிகரித்து வருவதால் அனைவரும் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுதல் அல்லது KYCக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிஎஃப் சேவைக்கு KYC சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கிறது.

KYC விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விட்டால் பிஎஃப் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்புக் சரிபார்ப்பு போன்ற சேவைகள் மிக எளிதாக இருக்கும். எனவே KYC முடிந்த பின்னரே நீங்கள் பிஎஃப் கணக்கு மாற்றம் செய்யவோ பிஎஃப் தொகையைத் திரும்பப் பெறவோ முடியும். ஆதலால்  KYC விவரங்களைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது. UAN EPFO போர்ட்டலில் KYC கட்டாயமாக உள்ளது. விவரங்களைப் புதுப்பிக்க அல்லது மாற்றம் செய்ய, ஊழியர்களுக்கு UAN எண் தேவை. அந்த எண்ணைக் கொண்டு உறுப்பினர் EPFO UAN போர்ட்டலில் நுழைய முடியும்.

நம் தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதன் மூலமாக KYCஐ புதுப்பிக்க முடியும். பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் திருத்தங்களுக்கான ஆன்லைன் கோரிக்கைகளையும் பிஎஃப் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. KYC விவரங்களில் பான் கார்ட் எண், ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கும். இந்நிலையில் ஊழியர்கள் EPFO போர்ட்டலில் தங்களது உறுப்பினர் விவரங்களை இன்னும் புதுப்பிக்காமல் இருந்தால் EPFO UAN போர்ட்டல் KYC விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

நிறுவனம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, உறுப்பினர்கள் EPFO UAN போர்ட்டல் மூலம் ஆதார், பான் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை உள்ளிட வேண்டும். UAN போர்ட்டலில் உள்நுழைவதன் மூலம் நீங்கள் மாதாந்திர அறிக்கையையும் பார்க்க முடியும். ஆதார் கார்டை UAN உடன் இணைக்க நீங்கள் eKYC போர்ட்டலைப் பயன்படுத்த வேண்டும். பான் மற்றும் UAN எண்ணை இணைத்த பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட பிஎஃப் சேவைகளை நீங்கள் உமாங் ஆப் மூலம் பெறலாம்.

Categories

Tech |