மது போதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் உமர்பாருக் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து உமர்பாருக்கை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உமர்பாரூக்கை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு உமர்பாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உமர் பாரூக் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரி முத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.